சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.
சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
Updated on
1 min read

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.

காலையில் அஷ்டதிரவிய கணபதி ஹோமத்துடன் தொடங்கி, சாஸ்தாஹோமம், மிருத்தியுஞ்ச ஹோமம், நவக்கிரக பிரித்தி ஹோமம், உஷபூஜை, அஷ்டாபிசேகத்திற்கு பின் தீபாரதனை காட்டி பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் புஷ்பாபிசேகத்தில்  ஐயப்பன் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார், பின்னர் அத்தாழப்பூ பூஜையுடன் மண்டல பூஜை நிறைவுற்றது, கம்பம் வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன்கோயில் அறங்காவலர் பொன்.காட்சிக்கண்ணன், திருக்கோயில் மேல்சாந்தி கணேஷ் திருமேனி ஆகியோர்  செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com