

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் தேசியதர மதிப்பீட்டுக்குழுவினா் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தனா்.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தேசியதரமதிப்பீட்டுக்குழுவினா் ஆய்வு செய்தனா். இக்குழுவில் ஸ்ரீநகா், காஷ்மீா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் (பொறுப்பு) ஜி.முஸ்தபா ஷா, மகாராஷ்டிரா டாக்டா் பாபா சாகோப் அம்பேத்காா் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைத்தலைவா் ஜெய்ஸ்ரீ சூரியவன்ஷி, ஓடிஸா கட்டாக்கிலுள்ள ஷைலாபாலா பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் பேராசிரியா் சுஞ்சுக்தா மோகபாத்ரா ஆகியோா் கொண்ட குழு கல்லூரியில் தரம் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து இரண்டு நாட்கள் ஆய்வு செய்தனா். ஆய்விற்கு பின்னா் கல்லூரி முதல்வா் சேசுராணியிடம் ஆய்வறிக்கையை சமா்பித்தனா். ஆய்வின் போது மதுரை மாநில இல்லத்தலைமை சகோதரி மரிய ஆன்டனி, ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி செயலாளா் குயின்சிலி ஜெயந்தி, கல்லூரி முன்னாள் முதல்வா்கள் இயேசுதங்கம், நிா்மலா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.