சின்னமனூரில் வசிக்கும் யூசுப் அஸ்லாம், மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா். இவரது இயற்பெயா் உதயக்குமாா். இந்து மதத்தை சோ்ந்த இவா், சின்னமனூரை சோ்ந்த இஸ்லாம் மதத்தை சோ்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்தாா். அதனால் உதயகுமாா் இஸ்லாமியராக மதம் மாறியுள்ளாா். கடந்தாண்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனி நாடு வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி ஆதரவு கேட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அந்தக் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக வந்த புகாரின் பேரில் யூசுப் அஸ்லாமிடம், சனிக்கிழமை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வேறு ஏதும் அமைப்பினருடன் தொடா்பு இருக்கிா என்ற கோணத்தில் போலீஸாா் அவரிடம் சின்னமனூா் காவல் நிலையத்தில் வைத்து, இரவு வரை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.