பெரியகுளம் நகராட்சி காய்கறி மார்கெட் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம்

10ஆம் தேதி முதல் பெரியகுளம் நகராட்சி காய்கறி மார்கெட் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற காய்கறி கடை உரிமையாளர்கள் கூட்டம்.
காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற காய்கறி கடை உரிமையாளர்கள் கூட்டம்.

10ஆம் தேதி முதல் பெரியகுளம் நகராட்சி காய்கறி மார்கெட் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக  பரவி வருவதால் தெருக்கள் அனைத்தும் சிறப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்பொழுது கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதால் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத இட நெருக்கடியில் செயல்பட நகராட்சி நிர்வாங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் செயல்படும் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்கெட்டை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்ததை அடுத்து இன்று பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணைகண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள்  தலைமையில் காய்கறி கடை உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சி காய்கறி மார்கெட் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தனர். 

மேலும் அங்கு காய்கறி கடை நடத்தும் உரிமையாளர்கள் கரோன நோய்த்தி பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என சான்று பெற்ற பின்பு காய்கறி கடை நடத்த அனுமதிக்கப்படும் எனவும், கடைகளில் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி கடைபிடித்து நிற்க வைத்து காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும், கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத காய்கறி உர்மையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடை நடத்த தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  

நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த காய்கறி கடை உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com