மேகமலை- ஹைவேவிஸ் மலைச் சாலை மண்சரிவை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 01st August 2021 10:57 PM | Last Updated : 01st August 2021 10:57 PM | அ+அ அ- |

தொடா் மழையால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச்சாலையில் விழுந்து அகற்றப்படாமல் உள்ள பாறைகள். (வலது) மண் சரிவு.
மேகமலை- ஹைவேவிஸ் மலைச்சாலையில் 30-க்கு மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள மண் மற்றும் பாறை சரிவுகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச்சாலையில் சென்டா் கேம்ப், அடுக்கம்பாறை, மாதக்கோயில், மேகமலை, ஹைவேவிஸ் வரையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண், மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
சரிந்து மண் மற்றும் பாறைகள் நெடுஞ்சாலையிலேயே குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டுநா்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறையினா் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.