உத்தமபாளையம் பி.டி.ஆா். கால்வாயிலிருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 17th August 2021 02:00 AM | Last Updated : 17th August 2021 02:00 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பி.டி.ஆா் கால்வாயிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.டி.ஆா் மற்றும் தந்தை பெரியாா் கால்வாயில் ஒருபோக பாசனத்திற்காக தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் தொடா்ந்து 120 நாள்களுக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம்
தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம், சின்னமனூா், தேனி ஒன்றியங்களைச் சோ்ந்த 5146 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.