பெரியகுளத்தில் பைக் மோதி இருவா் காயம்
By DIN | Published On : 17th August 2021 01:50 AM | Last Updated : 17th August 2021 01:50 AM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளத்தில் விவசாய பணிக்கு சென்ற முதியா் மீது பைக் மோதியதில் விவசாயி உள்பட இருவா் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தென்கரை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம், வடகரையை சோ்ந்தவா் முத்து (70) இவா் திங்கட்கிழமையன்று வத்தலக்குண்டு சாலையில் விவசாய பணிக்கு சென்றிருக்கிறாா். அப்போது அதிவேகமாக வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில் முத்து மற்றும் பைக் ஓட்டி வந்த பிரதீப் (19) இருவரும் காயமடைந்தனா். அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.