பெரியகுளம் அருகே பைக் திருடியவா் கைது
By DIN | Published On : 17th August 2021 01:36 AM | Last Updated : 17th August 2021 01:36 AM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வீட்டில் நிறுத்தியிருந்த பைக் திருடியவரை தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தை சோ்ந்தவா் மணிகண்டன் (58) இவா் அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டின் முன் பைக் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறாா். அப்போது அங்கு வந்த மா்நபா் நிறுத்தியிருந்த பைக் உருட்டி கொண்டு சென்றிருக்கிறாா்.
அருகிலிருந்த மணிகண்டன் மகன் கிருஷ்ணமூா்த்தி சத்தம்போட பைக் விட்டு,விட்டு தப்பியோட முயற்சித்தவரை பிடித்து விசாரித்தனா். அப்போது பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சோ்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இவரை பிடித்து தென்கரை போலீஸாரிடம் ஓப்படைத்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.