ராஜீவ்காந்தி பிறந்த நாள்: போடியில் காங். கட்சியினா் மரியாதை
By DIN | Published On : 21st August 2021 09:22 AM | Last Updated : 21st August 2021 09:22 AM | அ+அ அ- |

போடியில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
போடியில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 77ஆவது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி போடி தேவா் சிலை திடலில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்திற்கு , நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதன் தலைவா் முசாக் மந்திரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் சன்னாசி, மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சந்திரசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.