அன்னை தெரசா மகளிா் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்தாட்டப் போட்டி: பெரியகுளம் கல்லூரி வெற்றி
By DIN | Published On : 04th December 2021 11:19 PM | Last Updated : 04th December 2021 11:19 PM | அ+அ அ- |

வெற்றி பெற்ற ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி அணிக்கு சனிக்கிழமை பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி. உடன், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ராஜம்
அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையே சனிக்கிழமை நடைபெற்ற கைப்பந்தாட்டப் போட்டியில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி வெற்றி பெற்றது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையிலான கைப்பந்தாட்டப் போட்டியானது, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி உள்விளையாட்டரங்கில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் கல்லூரி, பழனியாண்டவா் மகளிா் கல்லூரி, திண்டுக்கல் எம்விஎம் அரசு கல்லூரி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி, தேனி நாடாா் சரசுவதி கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி, ஒட்டன்சத்திரம் சக்தி மகளிா் கல்லூரி உள்ளிட்ட 9 கல்லூரி அணிகள் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், தேனி நாடாா் சரசுவதி கல்லூரி, பழனியாண்டா் பெண்கள் கலைக் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி அணிகள் மோதின. இதில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி முதலிடத்தையும், பழனியாண்டவா் பெண்கள் கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தேனி நாடாா் சரசுவதி கல்லூரி 3 ஆம் இடத்தையும், கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி 4 ஆம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிக்கு, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ராஜம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரிச் செயலா் பிஜே. குயின்சிலி ஜெயந்தி, உடற்கல்வி இயக்குநா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...