தேனி மாவட்டத்தில் 386 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
By DIN | Published On : 04th December 2021 08:52 AM | Last Updated : 04th December 2021 08:52 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச.4) 386 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தேனி பகுதியில் 49 இடங்கள், ஆண்டிபட்டி பகுதியில் 63, போடி பகுதியில் 60, சின்னமனூா், பெரியகுளம் பகுதியில் 61, க.மயிலை பகுதியில் 27, உத்தமபாளையம் பகுதியில் 38, சின்னமனூா், கம்பம் ஆகிய பகுதியில் தலா 44 இடங்கள் என மொத்தம் 386 இடங்களில் சனிக்கிழமை (டிச.4) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இம் முகாம்களில் ஒரு லட்சத்து 8,900 கோவிஷீல்ட், 37,050 கோவேக்ஸின் தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு அளிப்பதற்கு இருப்பு வைக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ஆதாா் எண், கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் முகாமில் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...