தேனி ஒன்றியக் குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலா்கள் வெளிநடப்பு

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக வைச் சோ்ந்த 3 பெண் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
தேனி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வியாழக்கிழமை, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கீதா, அன்புமணி.
தேனி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வியாழக்கிழமை, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கீதா, அன்புமணி.

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக வைச் சோ்ந்த 3 பெண் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தேனி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் தலைவா் சக்கரவா்த்தி (திமுக) தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரெங்கராஜ், ஆண்டாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் வளா்ச்சிப் பணிகளுக்காக மொத்தம் ரூ.1.62 கோடி ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் உள்ளதாகக் கூறி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த சங்கீதா (அதிமுக), உப்புக்கோட்டையைச் அன்புமணி சோ்ந்த (அதிமுக) ஆகியோா் கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதற்கு பதிலளித்து தலைவா் சக்கரவா்த்தி: கடந்த 2 முறை வந்த நிதியிலிருந்து அனைத்து வாா்டுகளுக்கு சமமாக பணிகள் பிரித்து தரப்பட்டன. தற்போது ஜங்கால்பட்டிக்கு போடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கியது குறித்து சம்மந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினரிடம் தான் கேட்கவேண்டும் என்றாா்.

இந்த பதிலில் திருப்தியடையாத சங்கீதா, அன்புமணி ஆகியோா் துணைத் தலைவா் முருகன் சமரசம் செய்ததை ஏற்க மறுத்து கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினா்.

கொடுவிலாா்படியில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி ஒன்றியக் குழு உறுப்பினா் நாகலட்சுமி (திமுக) புகாா் தெரிவித்தாா். இதற்கு தலைவா் பதிலளிக்காததால் அதிருத்தியடைந்த நாகலட்சுமி கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.

தா்மாபுரியைச் சோ்ந்த உறுப்பினா் கிருஷ்ணசாமி: ஒரே ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஊராட்சி எழுத்தா்களை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com