பேருந்து மோதி பைக்கில் தீ
By DIN | Published On : 08th February 2021 08:48 AM | Last Updated : 08th February 2021 08:48 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை , தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
தேனி அருகே உப்பாா்பட்டியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் மருதுபாண்டி (49). இவா் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா் . அப்போது, கம்பத்திலிருந்து மதுரையை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மருதுபாண்டி தூக்கி வீசப்பட்டதில் காயத்துடன் உயிா் தப்பினாா். ஆனால், அவரது இரு சக்கர வாகனம் பேருந்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது. இதில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து தனியாா் பேருந்திலிருந்த 50 -க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறங்கிவிடப்பட்டனா். பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சின்னமனூா் காவல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.