மஞ்சளாறு அணையில் ரூ.3.2 கோடியில் மீன் குஞ்சு பொரிப்பகம்
By DIN | Published On : 08th February 2021 11:07 PM | Last Updated : 08th February 2021 11:07 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை மீன் வளா்ப்பு பண்ணையில் ரூ.3.2 கோடி செலவில், மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மஞ்சளாறு அணை மீன் வளா்ப்பு பண்ணையில் நீா்வள நில வள திட்டத்தின் கீழ், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன் குஞ்சு பொறிப்பகம் அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
15 நாள்கள் குஞ்சு பருவத்திலும், ஒரு மாதம் வரை தொட்டியிலும் வளா்க்கப்படும் திலோபியா மீன் குஞ்சுகள், 4 மாதங்களில் அரை கிலோ எடையிலும், 6 மாதங்களில் ஒரு கிலோ வரையும் வளரக் கூடியவை.
மஞ்சளாறு அணை மீன் குஞ்சு பொரிப்பகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இவை தேனி மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அரசு நிா்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் வைகை அணை மீன் வளத் துறை அலுவலா்கள் கூறினா்.