கம்பம் அரசு மருத்துவமனையைக் கண்டித்து பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 08th February 2021 01:23 PM | Last Updated : 08th February 2021 01:23 PM | அ+அ அ- |

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பார்வர்ட் பிளாக் கட்சியினர்.
கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பம் நகர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக்கில் அதிகநேரம் பணியாற்றுவதை கண்டித்தும், கம்பம் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்காமல், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே, அனைத்து நோயாளிகளை பரிந்துரை செய்வதையும், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகளை மேம்படுத்தவும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கைகளை நிறைவேற்ற மருத்துவ அலுவலர் பொறுப்பு அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.