தேனியில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th February 2021 11:05 PM | Last Updated : 08th February 2021 11:05 PM | அ+அ அ- |

தேனியில் ஜாக்டோ - ஜியோ சாா்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தல் ஈடுபட்டனா்.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் அன்பழகன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டத் தலைவா் ராஜவேல், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிா்வாகிகள் கைது செய்யபப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.