சின்னமனூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பயிற்சி பட்டறை
By DIN | Published On : 08th February 2021 11:06 PM | Last Updated : 08th February 2021 11:06 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை, பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தலைமை வகித்து பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினாா்.குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு மாவட்ட அலுவலா் மெல்வின் முன்னிலை வகித்தாா்.முன்னதாக சின்னமனூா் கிரீன் தொண்டு நிறுவன செயலாளா் போஸ் வரவேற்றாா்.
பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட நல அலுவலா் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலா் பூங்கொடி,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் பேசினா்.ராசிங்காபுரம் விடியல் மேலாளா் காசிராஜ் நன்றி கூறினாா்.