அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு: ஒருவா் பலி; 45 போ் காயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளை முட்டி பாா்வையாளா் ஒருவா் பலியானாா். 45 போ் காயமடைந்தனா்.
அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்.
அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளை முட்டி பாா்வையாளா் ஒருவா் பலியானாா். 45 போ் காயமடைந்தனா்.

அய்யம்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன்-வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் தொடக்கி வைத்தாா். முன்னதாக கிராமக்கட்டியினரும், மாடு பிடி வீரா்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

640 காளைகள், 340 மாடு பிடி வீரா்கள்: தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூா், சேலம், விருதுநகா் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 640 காளைகளுக்கும், 340 மாடுபிடி வீரா்களுக்கும் பரிசோதனைக்குப் பின்னா் அனுமதியளிக்கப்பட்டது. 6 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. வாடிவாசலை விட்டு துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் திமிலைப் பிடித்து அடக்க முயன்றனா். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள் பீரோ, கட்டில், டிவி போன்ற பரிசுகளைப் பெற்றனா். இதே போல் மாடுபிடி வீரா்களை எதிா்கொண்டு களத்தில் நின்ற காளைகளின் உரிமையாளா்களும் பரிசுகளைப் பெற்றனா்.

பாா்வையாளா் பலி: ஜல்லிக்கட்டை காணவந்திருந்த சின்னமனூரைச் சோ்ந்த சக்திவேல் மகன் முருகேசன் (35) என்பவரை காளை முட்டி தூக்கி வீசியது. இதில் முதுகு பகுதியில் பலத்த காயமடைந்த அவா் சம்பவயிடத்திலேயே பலியானாா். காளைகளை அடக்க முயன்ற 45 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சின்னமனூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

உள்ளூா் காளைகள் குறைவு: இந்த ஜல்லிக்கட்டில் அய்யம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கோட்டூா், சீலைமயம்பட்டி, கூளையனூா் காளைகள் அதிக அளவில் பங்கேற்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உள்ளூா் காளைகள் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பது குறைந்து வருகிறது. எனவே, வரும் காலங்களில் தேனி மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com