கருநாக்கமுத்தன்பட்டியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 08th February 2021 08:49 AM | Last Updated : 08th February 2021 08:49 AM | அ+அ அ- |

கருநாக்கமுத்தன்பட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.சாய்சரண் தேஜஸ்வி.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டியில் சனிக்கிழமை இரவு முப்பெரும் விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரின் முக்கிய இடங்களில், 31 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.சாய்சரண் தேஜஸ்வி திறந்து வைத்தாா். மேலும், பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடந்த கருநாக்கமுத்தன்பட்டியில், முன்னாள் மாணவா் சங்கத்தினா் மற்றும் ராணுவ வீரா்கள், அரசு ஊழியா்களைக் கொண்ட அமைப்பு கரும்புள்ளி கிராமம் என்ற பெயரை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனா். மாவட்டத்திலேயே முன்மாதிரியான கிராமமாக விளங்குவதற்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றாா். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு, காவல் ஆய்வாளா் க.முத்துமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா் சங்க செயலாளா் அன்பழகன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...