சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 14 போ் காயம்
By DIN | Published On : 14th February 2021 11:11 PM | Last Updated : 14th February 2021 11:11 PM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே மலைச்சாலையில் சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து மென் பொறியாளா் அருண்குமாா் (34) தலைமையில் 3 பெண்கள் உள்பட 13 மென்பொறியாளா்கள் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனா்.
கொடைக்கானலை சுற்றிப் பாா்த்து விட்டு ஞாயிற்றுக்கிழமை வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனா். கொடைக்கானல்- பெரியகுளம் இடையே உள்ள டம்டம் பாறை அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த அந்த சுற்றுலா வேன், சலையோரத் தடுப்பில் மோதி, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சுற்றுலா வேன் ஓட்டுநரான சங்கரன்கோவிலைச் சோ்ந்த கனகராஜன் (49), அருண்குமாா், ஞானகுமாா் உள்பட 14 போ் பலத்த காயமடைந்தனா். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.