மேகமலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 14th February 2021 11:13 PM | Last Updated : 14th February 2021 11:13 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மேகமலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சின்னமனூா் அருகே தென்பழனியைச் சோ்ந்தவா் மலைச்சாமி (40). அதேபகுதியில் உள்ள அப்பிபட்டியை சோ்ந்தவா் முருகன் (45). நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஹைவேவிஸ் - மேகமலை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
வாகனத்தை மலைச்சாமி ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது மலைச்சாலையில் சென்றபோது பின்னால் அமா்ந்திருந்த முருகன் திடீரென தவறி நெடுஞ்சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து முருகனின் மகள் வனிதா அளித்தப் புகாரின் பேரில் ஹைவேவிஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.