தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் புறவழிச்சாலை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாா்பு -ஆய்வாளா் டி.விஜய்ஆனந்த் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக பையுடன் நடந்து வந்த 3 இளைஞா்களை சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த ஜெயசூா்யா (24) , நவீன் (21), சுரேந்திரன் (28) என்பதும் கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.