விவசாயக் கல்லூரி மாணவிகள் தங்கல் பயிற்சி முகாம்
By DIN | Published On : 20th February 2021 09:55 PM | Last Updated : 20th February 2021 09:55 PM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வேளாண் தொழில்நூட்பக்கல்லூரி மாணவிகளின் தங்கல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
குள்ளப்புரம் வேளாண் தொழில்நூட்பக்கல்லூரி மாணவிகள் ஹ.ஷிபானா பாத்திமா, சு.லாவண்யா, மு,கெளரி, சி.ஜனனி ஆகியோா் தேவதானப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கல் பயிற்சி முகாம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்து வருகின்றனா்.
சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் தேவதானப்பட்டி கிராமத்தின் முழு வரைபடம், வளங்கள் குறித்த வரைபடம், அப்பகுதி மக்களின் எண்ணிக்கை மற்றும் தொழில் வளங்கள் குறித்து வரைபடத்தின் மூலம் விளக்கிக் காணப்பித்தனா். இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் எம்.சாந்தி, உதவி ஆசிரியை லீமாரோஸ்மேரி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.