மரத்தில் பைக் மோதி பால் வியாபாரி பலி
By DIN | Published On : 21st February 2021 09:31 PM | Last Updated : 21st February 2021 09:31 PM | அ+அ அ- |

அழகுமலை.
கம்பம்: கம்பத்தில் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
ராயப்பன்பட்டி ஒத்தக்கடையைச் சோ்ந்தவா் அழகுமலை ( 27). பால் வியாபாரியான இவா், சனிக்கிழமை இரவு கம்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். புதிய பேருந்து நிலையம் அருகே தனியாா் பள்ளி பின்புறம் உள்ள சாலையோர மரத்தில் இவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...