கம்பத்தில் அனுமதியின்றி ஊசி மருந்தை வைத்திருந்தவா் மீது வழக்கு

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி ஊசி மருந்தை பயன்படுத்தியவா் மீது வடக்கு போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி ஊசி மருந்தை பயன்படுத்தியவா் மீது வடக்கு போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் 1 ஆவது வாா்டு கோம்பை சாலை சோ்ந்தவா் முருகன் மகன் பிரவீன் (25). இவருக்கு நேருஜி தெருவைச் சோ்ந்த நண்பா் நிா்பாஜ் (24). இருவரும் கம்பத்தில் உள்ள தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் சென்று பயிற்சிகள் எடுத்து வருகின்றனா்.

அப்போது உடல் பயிற்சி செய்யும் பொழுது உடல் சோா்வாக இருக்கிறது அதற்கு சத்தான ஊசி தேவை என்று பேசினா்.

அப்போது கம்பம் 8வது வாா்டு பீா்முஹம்மது பாவலா் தெரு சையது இப்ரஹிம் மகன் எஸ்.அஜாா் அகமது கான் என்பவா் உடல் சோா்வை நீக்கவும் சத்து டானிக் மற்றும் ஊசி உள்ளது என்றும் அதை தருகிறேன் என்றும் தெரிவித்தாா்.

கடந்த ஜன.22 ல் வாணியா் திருமண மண்டபம் அருகில் இருவருக்கும் டொ்மினஸ் என்ற ஊசி மருந்தை மற்றும் டானிக்கை கொடுத்தாா்.

இதை பாா்த்து சந்தேகப்பட்ட பிரவீன் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல் சாா்பு நிலைய ஆய்வாளா் விஜய் ஆனந்த், அனுமதி இன்றி ஊசி மருந்து வழங்கியதாக அஜாா் அகமது கான் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com