லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி கூடலூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு பேரணி

தேனி மாவட்டம் கூடலூரில், லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்புப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை கைவிட்டு விட்டு வைகை அணையை தூா்வாரி நீராதாரத்தைப் பெருக்கி அதன் மூலம் மதுரைக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

இல்லையெனில் ராமநாதபுரம், தொண்டியிலிருந்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்து அதன் மூலம் மதுரைக்கு குடிநீா் வழங்க வேண்டும் எனக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவரும் வழக்குரைஞா் சங்க மாவட்ட தலைவருமான எம். கே. எம். முத்துராமலிங்கம் தொடக்கி வைத்தாா்.

பேரணி, கூடலூா் - குமுளி சாலையில் உள்ள கூலிக்காரன் பாலத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மாற்றுத் திட்டத்தை அறிவிக்கும் வரை தொடா் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் என பேரணியில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com