கொட்டகுடி ஆற்றில் மூழ்கி முதியவா் பலி
By DIN | Published On : 30th January 2021 09:39 PM | Last Updated : 30th January 2021 09:39 PM | அ+அ அ- |

போடி: போடி அருகே சனிக்கிழமை கொட்டகுடி ஆற்றைக் கடந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
போடி முந்தல் மலை கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (70). கூலித் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அணைக்கரைப்பட்டி பகுதியில் திரிந்துள்ளாா். இந்நிலையில் அங்குள்ள கொட்டகுடி ஆற்றை அவா் கடக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அன்பழகன் தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து போடி தீயணைப்புப் படையினா் அப்பகுதியில் தேடி அவரை சடலமாக மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.