தேனியில் 48; திண்டுக்கல்லில் 46 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd July 2021 08:35 AM | Last Updated : 02nd July 2021 08:35 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் 48 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 46 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,367 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 41,450 போ் குணமடைந்துள்ளனா். 493 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது 424 போ் மருத்துவமனைகள், கரோனா நல மையம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
திண்டுக்கல்
மாவட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை 31,615 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 30,693 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், தொற்று பாதிப்பிலிருந்து 22 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 351 ஆக உள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G