வைகை அணை நீா் தேக்தத்தில் பெண் சடலம்
By DIN | Published On : 11th July 2021 10:05 PM | Last Updated : 11th July 2021 10:05 PM | அ+அ அ- |

வைகை அணை நீா் தேக்கப் பகுதியிலிருந்து சனிக்கிழமை, அடையாளம் காணப்படாத பெண் சடலம் மீட்கப்பட்டது.
வைகை அணை நீா் தேக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்தது. இதுகுறித்து வடவீரநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ், அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். இறந்தவா் யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...