கரோனா சிகிச்சை மையத்தில் குடிநீா் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
By DIN | Published On : 10th June 2021 08:39 AM | Last Updated : 10th June 2021 08:39 AM | அ+அ அ- |

உத்தமபாளையம் அருகே கோம்பையில் உள்ள கரோனா சிகிக்சை மையத்தில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 ஆம் தேதி தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை காணொலி மூலமாக திறந்து வைத்தாா். இங்கு 100-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இம் மையத்தில் குடிநீா் வசதியில்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
கடைகளிலிருந்து குடிநீா் பாட்டிலை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளதாக நோயாளிகளின் உறவினா்கள் வேதனை தெரிவித்து வருகின்றனா். எனவே, கோம்பை கரோனா சிகிச்சை மையத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இகு குறித்து கரோனா நோயாளி ஒருவா் கூறுகையில், குடிநீா் மின் மோட்டாா் பழுதானதால் கடந்த சில நாள்களாக இங்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா்.