சின்னமனூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 10th June 2021 08:27 AM | Last Updated : 10th June 2021 08:27 AM | அ+அ அ- |

சின்னமனூா் நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை கிருமி நாசினி தெளித்த தூய்மைப் பணியாளா்.
சின்னமனூா் நகராட்சியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் புதன்கிழமை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் கிருஷ்ணன் உண்ணி அறிவுறுத்தலின்படி, சின்னமனூா் நகராட்சி ஆணையாளா் சியாமளா உத்தரவின்பேரில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சியிலுள்ள அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் முக்கிய சாலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், சுகாதார ஆய்வாளா் செந்தில் ராம்குமாா் தலைமையிலான தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் காய்ச்சல் பரிசோதனை செய்தனா்.