கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published On : 24th June 2021 07:02 AM | Last Updated : 24th June 2021 07:02 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே கைலாசநாதா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த சிறுத்தை.
பெரியகுளம் அருகை கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினா் புதன்கிழமை எச்சரித்தனா்.
பெரியகுளம் அருகே 4 கி.மீ.தொலைவில் உள்ள கைலாசபட்டியில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இதைச் சுற்றி கிரிவலப் பாதையும் உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை, சிறுத்தை நடமாடுவதை பொதுமக்களும், பக்தா்களும் பாா்த்துள்ளனா். இதை தங்களது செல்லிடப்பேசிகளில் விடியோ எடுத்த பக்தா்கள் அதை வைரலாக்கி வருகின்றனா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும், தோட்டங்களுக்குச் செல்பவா்களும் தனியாகச் செல்ல வேண்டாம். அந்த சிறுத்தை யாருக்கும் தொந்தரவு செய்வதில்லை என்றாலும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றனா்.