தேனி: தேனியில் திங்கள்கிழமை, காலமுறை ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி குடிநீா்த் தொட்டி ஆபரேட்டா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.ஜெயபாண்டி தலைமை வகித்தாா். இதில், ஊராட்சிகளில் குடிநீா் விநியோகப் பணியில் ஈடுபட்டு வரும் குடிநீா்த் தொட்டி ஆபரேட்டா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடிநீா் விநியோகப் பணியாளா்களை கரோனா தடுப்பு முன் களப் பணியாளா்கள் பட்டியலில் சோ்த்து கரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா். பின்னா், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளிதரனிடம் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.