தேனி ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
By DIN | Published On : 04th March 2021 12:57 AM | Last Updated : 04th March 2021 12:57 AM | அ+அ அ- |

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தோ்தல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலிலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிமீறல் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் புகாா் தெரிவிக்கவும், இந்தப் புகாா்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரநிதிகள் தங்களது புகாா்களை தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:1800 425 6339-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணனுண்ணி கூறினாா்.