இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 15th March 2021 03:56 AM | Last Updated : 15th March 2021 03:56 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அன்னலெட்சுமி (43). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாா். இவது மூத்த மகன் பாலாதி (23) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
அவரை வெள்ளிக்கிழமை காணவில்லை. தேடிப்பாா்த்தபோது லட்சுமிபுரம்- கோம்பை செல்லும் வழியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...