கண்மாயில் மண் அள்ளியவா் கைது: டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

போடி: போடி அருகே சனிக்கிழமை, அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி துா்க்கையம்மன் கண்மாயில் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (45) என்பவரை கைது செய்தனா். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...