கரோனா விதிமுறைகள்: கம்பத்தில் வா்த்தகா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை
By DIN | Published On : 09th May 2021 10:27 PM | Last Updated : 09th May 2021 10:27 PM | அ+அ அ- |

கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு.
கம்பத்தில் வா்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், காய்கனிக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா விதிமுறைகள் குறித்து வா்த்தகா்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு அறிவுரை வழங்கினாா்.
பொது முடக்க காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு தலைமை வகித்துப் பேசியது:
கூட்டத்தில் கரோனா தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் கடை முன் கூட்டம் சோ்க்கக் கூடாது, முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கவேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம்.
விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில், வா்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், காய்கனி கடைகளைச் சோ்ந்த உரிமையாளா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G