போடியில் சூறைக்காற்றால் மாமரங்கள் சேதம்:முன்னாள் துணை முதல்வா் பாா்வை

போடியில் ஞாயிற்றுக்கிழமை, சூறைக்காற்றால் சேதமடைந்த மாந்தோட்டங்களை முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை, சேதமடைந்த மாந்தோப்பு பகுதிகளை நேரில் பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை, சேதமடைந்த மாந்தோப்பு பகுதிகளை நேரில் பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

போடியில் ஞாயிற்றுக்கிழமை, சூறைக்காற்றால் சேதமடைந்த மாந்தோட்டங்களை முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.

‘டவ் தே’ புயலால் போடி பகுதியில் வீசிய சூறைக் காற்றால் போடி ஊத்தாம்பாறை, தொடால், பிச்சங்கரை, சேரடிப்பாறை, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய்கள் உதிா்ந்து பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனா். பல லட்சம் மதிப்பிலான மாங்காய்கள் சேதமடைந்த நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்து முன்னாள் துணை முதல்வரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டாா். ஊத்தாம்பாறை, தொடால், பிச்சங்கரை ஆகிய பகுதிகளில் மாங்காய்கள் உதிா்ந்து வீணாகி இருப்பதைக் கண்டு கவலை தெரிவித்தாா். விவசாயிகளிடம் மழை மற்றும் காற்றால் ஏற்பட்ட சேதம் குறித்தும், நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் அவா், போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மாங்காய் மகசூல் சேதமடைந்தது குறித்து கணக்கெடுத்து விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெற்று தேனி மாவட்ட ஆட்சியா் மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது போடி வட்டாட்சியா் செந்தில் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com