பொதுமுடக்கம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் சாலைகள் மூடல்

தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் 2 மலைச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனைச்சாவடி.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனைச்சாவடி.

தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் 2 மலைச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் கம்பமெட்டு அடிவாரம் மற்றும் லோயா் கேம்ப் நுழைவு பகுதியிலேயே அடைக்கப்பட்டன.

இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக மருத்துவ சேவைக்கான வாகனங்கள் செல்வதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பால் மற்றும் காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

இரு மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதை, இ- பாஸ் மற்றும் ஆவணங்களை சரிபாா்த்து அனுப்பி வைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com