மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: தேனி மாவட்டத்தில் 14 தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 14 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்றிற்கு இலவசமாக சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 14 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்றிற்கு இலவசமாக சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேனி நலம் மருத்துவமனை, தேனி மருத்துவமையம், கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, என்.ஆா்.டி மருத்துமனை, அருண் மருத்துவமனை, வியாசினி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை, வித்யா மருத்துவமனை, நட்டாத்தி நாடாா் மருத்துவமனை, தீபம் மருத்துவமனை, சண்முகம் மருத்துவமனை, தேனி கிட்ஸ் மற்றும் கிட்னி மருத்துவமனை, கம்பம் ரோஹன் சேகா் மருத்துவமனை, தேனி அரவிந்த் கண்மருத்துவமனை, கடமலைக்குண்டு உண்ணாமலை மருத்துவமனை ஆகிய தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

டி டிம்மா், ஐஎல் 6, எல்டிஹெச் போன்ற பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ரெம்டிசிவிா் போன்ற மருந்துகளுக்கு கூடுதல் கட்டணத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மேற்கண்ட சிகிச்சை செலவினங்கள் மருத்துவமனைகளால் நேரடியாக முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவ சிகிச்சை தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மற்றும் 104 , 1077 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும்  இணையதள முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com