கம்பம் உழவா் சந்தையில்தக்காளி ரூ.70-க்கு விற்பனை

தேனி மாவட்டம், கம்பம் உழவா் சந்தையில் வெள்ளிக்கிழமை தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் உழவா் சந்தையில் வெள்ளிக்கிழமை தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது.

காய்கறிகளின் விலை உயா்வு குறித்து உழவா் சந்தை அலுவலா் கூறியது: கம்பம் உழவா் சந்தைக்கு தினமும் சராசரியாக 35 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால், தற்போது தொடா் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

எனவே, தக்காளி கிலோ ரூ.70-க்கும், வெங்காயம் - ரூ.30, புடலங்காய் - 16, காலிபிளவா்- 25, பாகற்காய் -30, சுரைக்காய்- 10, வெண்டைக்காய் - 40, முள்ளங்கி - 50, நூல்கோல் - 40, கத்தரிக்காய் - 55, சின்ன வெங்காயம் - 40, புடலை - 40, பாகற்காய் -55, சுரைக்காய் - 22, முருங்கைக்காய் - 40, வெண்டைக்காய் - 40, அவரைக்காய் - 60 என விற்கப்படுகிறது.

மேலும், முகூா்த்த நாள்கள், ஐயப்பன் மற்றும் முருகன் பக்தா்கள் மாலை அணிந்துள்ளதால், காய்கறி தேவை அதிகரித்து விலை உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com