சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளியின்றி கிராம சபைக் கூட்டம் 

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்களிடம் கரோனா தொற்று  பரவல் அச்சத்தை  ஏற்படுத்தியது.
சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.
சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்களிடம் கரோனா தொற்று  பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றது. தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை வகித்தார், துணைத் தலைவர் ஜெயந்திமாலா முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கண்டு தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி பேசினார்.

கிராமசபைக் கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் சுமார் 100 பேர் சமூக இடைவெளியின்றி, முடக்கவசம் அணியாமல், தரையில் நெருக்கமாக அமர்ந்திருந்தது பொதுமக்களிடையே கரோனா தொற்று பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது. கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் இருந்தது பொதுமக்களை தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கவலையடையச் செய்தது.

கருநாக்கமுத்தன் பட்டியில் ஊராட்சி தலைவர் ஆ.மொக்கப்பன், துணைத்தலைவர் சரோஜா சிங்கராஜ், குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தலைவர் பொன்னுத்தாயி குணசேகரன், துணைத்தலைவர் ஜெயந்தி, ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் தலைவர் சாந்தி பரமன், நாராயண தேவன் பட்டி ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, துணை தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட  கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com