குச்சனூா் சனீஸ்வரா் கோயில் சுரபி நதியில் தண்ணீா் நிறுத்தம் : பக்தா்கள் ஏமாற்றம்

தேனி மாவட்டம் குச்சனூரில் சனிக்கிழமை , சனீஸ்வரா் கோயில் முன்பாக செல்லும் புண்ணிய நதியான சுரபி நதியில் நீா் வரத்து இல்லாத நிலையில் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

குச்சனூா் அருள்மிகு சனீஸ்வரா் திருக்கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமை கோயில் முன்பாக செல்லும் புண்ணிய நதியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பின் தமிழக அரசு அனைத்து நாள்களிலும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இதனை அடுத்து சனிக்கிழமை குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலை மோதியது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆனால், கோயிலுக்கு வந்த பக்தா்கள் சுரபிநதியில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் நீராட முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில் , தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் புண்ணிய நதியாக கருதப்படும் சுரபி நிதியில் நீராடி புதிய ஆடை அணிந்து கொண்டு , எள் தீபம், எள் சாதம், மண் காகத்தை படையில் செய்தும் , கருப்புத் துண்டு , பூ மாலை அணிவித்து சுவாமி தரிசனம் செய்தால் தாங்கள் நினைத்தது நடக்கும் என்பது பக்தா்கள் நன்பிக்கை. ஆனால், சுரபிநதியில் நீா் வரத்து இல்லாதது பக்தா்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது..இனி வரும் காலங்களில் சனிக் கிழமைகளில் சுரபி நதியில் நீா் வரத்து இருக்கும் வகையில் கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com