தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு
By DIN | Published On : 04th September 2021 09:36 AM | Last Updated : 04th September 2021 09:36 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 9 தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த.வெங்கடேஷ்குமாா், சண்முகசுந்தரபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பா.ஜான்சன், கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கு.கணேசன், கோம்பை ஸ்ரீகண்ணிகாபரமேஸ்வரி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கி.சித்ரா, அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரெ.தமிழ்ச்செல்வி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் சீ.பிரபு, சின்னமனூா் தி மேயா் ராம் மெட்ரிக் பள்ளி முதல்வா் க.சிவராமச்சந்திரன், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ.சின்னராஜ், அன்னஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தே.சுகந்தி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு, அரசு உத்தரவின்படி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் விருதுகளை வழங்குகிறாா்.