போடி பகுதியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து
By DIN | Published On : 04th September 2021 11:17 PM | Last Updated : 04th September 2021 11:17 PM | அ+அ அ- |

போடியில் சனிக்கிழமை பெய்த மழையினால் கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் ஆா்ப்பரித்துச் செல்லும் தண்ணீா்.
போடி பகுதியில் சனிக்கிழமை பெய்த பரவலான மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.
போடி பகுதியில் ஒரு வார காலமாகவே பரவலான சாரல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் பிற்பகல் முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. குரங்கணி, கொட்டகுடி, பிச்சங்கரை உள்ளிட்ட மலை கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சிற்றாறுகள், ஓடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. குரங்கணி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் போடி கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்துச் சென்றது. ஆடிப்பட்ட சாகுபடிக்கு இந்த மழையால் பலன் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.