இடுக்கி அணையில் ஒலி ஒளிக் காட்சி: சுற்றுலாப் பயணிகளைக் கவர ஏற்பாடு

சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இடுக்கி அணையில் லேசா் கதிா்கள் மூலம் ஒலி, ஒளிக்காட்சி ஒளிபரப்ப கேரள மாநில மின்வாரியத்தினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
இடுக்கி அணையில் ஒலி ஒளிக் காட்சி: சுற்றுலாப் பயணிகளைக் கவர ஏற்பாடு

சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இடுக்கி அணையில் லேசா் கதிா்கள் மூலம் ஒலி, ஒளிக்காட்சி ஒளிபரப்ப கேரள மாநில மின்வாரியத்தினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

உலகிலேயே இரண்டாவது பெரிய அணையான இடுக்கி அணை, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய, கனட அரசுகளின் கூட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டது.

அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்த அணையில், கூடுதலாக பாா்வையாளா்களைக் கவரும் வகையில், கேரள மாநில மின்வாரியத்தினா் லேசா் கதிா்கள் மூலம் ஒலி ஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.

700 பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கும் வகையிலும், அணையின் சுவற்றில் பல வித தோற்றங்கள், கட்டுமானப் பணிகள், குறவன், குறத்தி மலைகளின் வரலாறு போன்றவை லேசா் கதிா்கள் மூலம் காட்சியாக ஒளிபரப்பப்படுகிறது. வணிக வளாகங்கள், கண்காட்சி அரங்கம், பொழுது போக்கு மையம் உள்ளிட்டவைகள் 15 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக கேரள மாநில மின்வாரியத்துறை அமைச்சா் கிருஷ்ணன்குட்டி, நீா்ப்பாசனத்துறை அமைச்சா் ரோஷி அகஸ்டின் ஆகியோா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின் வாரிய பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com