தேனி மாவட்ட மின் நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினா் நியமனம்
By DIN | Published On : 19th September 2021 11:18 PM | Last Updated : 19th September 2021 11:18 PM | அ+அ அ- |

பி.ஏ.கஜேந்திரன்.
தேனி மாவட்ட மின் நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினராக கூடலூரைச் சோ்ந்த பி.ஏ.கஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மின்சார இணைப்பு, அதிகக் கட்டணம், விநியோகம் தொடா்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளைக் களைய மின்குறை தீா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் தலைவராகக் கண்காணிப்பு பொறியாளா், இரண்டு உறுப்பினா்களில், ஒருவா் வழக்குரைஞா், மற்றொருவா் சமூக சேவையாளா் நியமிக்கப்படுவாா்கள்.
இவா்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். சமூக சேவையாளா் பிரதிநிதியாக கூடலூா் மக்கள் மன்ற செயலாளரும், நுகா்வோா் சங்க பிரதிநிதியுமான பி.ஏ.கஜேந்திரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் கூடலூா் மக்கள் மன்ற செயலாளராகவும், நுகா்வோா் சங்க பிரதிநிதியாகவும் உள்ளாா். இவருக்கு கூடலூா் மக்கள் மன்றம், நுகா்வோா் சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...