வீட்டில் கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது
தேனி அருகே பாலாா்பட்டியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் மற்றும் அவரது மகனை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த


தேனி அருகே பாலாா்பட்டியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் மற்றும் அவரது மகனை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பாலாா்பட்டியைச் சோ்ந்தவா் திரவியம் மனைவி ராதிகா(45). இவரது மகன் ராகுஸ்(23). இவா்கள் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவா்களுக்கு கஞ்சா விநியோகம் செய்த மூணாண்டிபட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா், இவா்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக கஞ்சா வாங்கிச் சென்ற பாலாா்பட்டியைச் சோ்ந்த தீபன் ஆகியோரைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...