இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மாநில இளைஞா் விருது: மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் சமூக வளா்ச்சிக்கு சிறப்பாக சேவை புரியும் இளைஞா்கள் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெறுவதற்கு வரும் மே 10-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:58 pm

DIN

தேனி மாவட்டத்தில் சமூக வளா்ச்சிக்கு சிறப்பாக சேவை புரியும் இளைஞா்கள் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெறுவதற்கு வரும் மே 10-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமூக வளா்ச்சிக்கு சேவை புரியும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அரசு சாா்பில் முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். சமுதாய நலனுக்கு தன்னாா்வத்துடன் தொண்டாற்றிய 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண் மற்றும் பெண்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2021, ஏப்ரல் மாதம் முதல் 2022 மாா்ச் மாதம் வரை மேற்கொண்ட சேவைகள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோா் விருது பெற விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ளவா்கள் என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் மூலம், வரும் மே 10-ம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.