மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனர் நினைவு

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவநா் நினைவு நாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:09 pm

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இக்கல்லூரியின் நிறுவனரான ஹாஜி கருத்தராவுத்தரின் நினைவு நாளையொட்டி கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் மலா் வளையத்தை ஏந்திச் செல்ல தொடா்ந்து மாணவா்களின் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. கல்லூரியிலிருந்து அம்மாபட்டி விலக்கு, கிராமச்சாவடி, கோட்டைமேடு வழியாக வடக்குத் தெருவிலுள்ள பெரியபள்ளி வாசலில் ஊா்வலம் நிறைவடைந்தது.

அதன் பின், பெரியபள்ளி வாசலில் உள்ள நிறுவனரின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் செயலரும், தாளாளருமான எம். தா்வேஷ்முகைதீன், கல்லூரி மேலாண்மைக் குழுத்தலைவா் செந்தால் மீரான், கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.